200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3வது அதிவேக இந்தியப் பெண்மணி என்ற ஒரு பெருமையைத் தனலட்சுமி பெற்றார்.
கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்ற கோசானோவ் நினைவு தடகளப் போட்டியில் 200 மீட்டர் பிரிவில் அவர் தனது தனிப்பட்டச் சாதனை அளவிலான நேரத்தில் அந்தத் தூரத்தினைக் கடந்து தங்கம் வென்றார்.
தேசியச் சாதனையாளர்களான சரஸ்வதி சாஹா (22.82 வினாடிகள்) மற்றும் ஹிமா தாஸ் (22.88 வினாடிகள்) ஆகியோருக்குப் பிறகு 23 வினாடிகளில் இந்தத் தூரத்தினைக் கடந்த மூன்றாவது இந்தியப் பெண்மணி இவரே ஆவார்.
தனலட்சுமி சேகர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியத் தடகள வீராங்கனை ஆவார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான நவ்ஜீத் தில்லான் தங்கப் பதக்கம் வென்றார்.