ஹீருன்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் 2018-ல் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து 31 புதிய பணக்காரர்களைக் கொண்டு இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
2,157 நிறுவனங்கள் மற்றும 68 நாடுகளைச் சேர்ந்த 2694 கோடீஸ்வரர்கள் ஹீருன்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பெரும் பணக்காரராக முதலிடத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி நீடிப்பினும், சொத்து வளத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்ட இந்தியராக கௌதம் அம்பானி திகழ்கிறார்.
அவருடைய சொத்து வளம் 14 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு 109 சதவீதம் பெருகியுள்ளது.
மேலும் இந்தியாவின் 3 இளம் கோடீஸ்வரர்களாக ஷரதா அகர்வால் 32-வது இடத்திலும், திவ்யங்க் துராக்ஹியா 35-வது இடத்திலும், பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் 39-வது இடத்திலும் விஜய் சேகர் ஷர்மா 39-வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஷோஸ் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெர்க்சையர் ஹதாவே (Berkshire Hathaway) நிறுவனத்தின் வாரன் பப்பெட்டும், மைக்ரோசாப்ட்டின் பில் கேட்சும், பேஸ்புக்கின் மார்க் சூகர்பெர்க்கும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.