கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் குழுவின் (CAC) நிர்வாகக் அமைப்பின் ஆசியப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது இத்தாலியின் ரோமில் உள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் அதன் 46வது கூட்டத்தின் போது நடைபெற்றது.
கேழ்வரகு, குதிரைவாலி, வரகு அரிசி, பனிவரகு மற்றும் சாமை போன்ற தினைகளுக்கு உலகளாவியத் தரநிலைகளை நிறுவ இந்தியா முன்மொழிந்தது.
கோடெக்ஸ் தற்போது சோளம் மற்றும் முத்து தினைக்கான தரங்களைக் கொண்டுள்ளது.
CAC என்பது ஒரு சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பாகும்.
இது 1963 ஆம் ஆண்டு FAO மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றால் இணைந்து நிறுவப்பட்டது.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) சுகாதார மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகளை (SPS) பயன்படுத்துவதற்கான ஒப்பந்தமானது கோடெக்ஸ் தரநிலைகளை அங்கீகரிக்கிறது.
இந்தியா 1964 ஆம் ஆண்டு கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் அமைப்பில் உறுப்பினரானது.