கோட்பந்தர் கோட்டையில் உள்ள இரகசிய அறை
June 22 , 2024
154 days
200
- கோட்பந்தர் கோட்டையின் மறுசீரமைப்பு பணியின் போது அதன் உள் அடுக்குகளுக்கு அடியில் இரகசிய அறை ஒன்று இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உல்லாஸ் ஆற்றின் மீது அமைந்துள்ள கோட்பந்தர் கோட்டை போர்த்துகீசியர்களால் 1730 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
- தொடக்கத்தில் குதிரை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இக்கோட்டை பின்னர் மராட்டியர்களாலும் ஆங்கிலேயர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.
- இந்தக் கோட்டையில் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்த போர்த்துகீசிய தேவாலயம் மற்றும் பல்வேறு வரலாற்று கட்டமைப்புகள் உள்ளன.
Post Views:
200