தமிழ்நாடு அரசு ஆனது, அயல்நாட்டு மர இனமான கோனோகார்பஸ் மரங்களை நடுவதையும் அவற்றை விற்பனை செய்வதையும் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய ஆலோசனை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
மிகவும் வேகமான வளர்ச்சி மற்றும் மிகப் பசுமையான இலைகளுக்குப் பெயர் பெற்ற கோனோகார்பஸ், சாலையோரங்கள், சாலைகளின் மையத் தடுப்பு பகுதிகள் மற்றும் பொது தோட்டங்களில் பசுமையாக்க முன்னெடுப்புகளில் நடுவதற்கான பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது.
பல்வேறு மண் மற்றும் பருவநிலை சூழல்களில் செழித்து வளரும் திறன் கொண்ட இந்த மரமானது நகர்ப்புற மேம்பாட்டிற்கு ஏற்ற ஒரு பெரும் அலங்கார வளர்ப்பு மரமாக அமைகிறது.
இந்த மரத்தின் மகரந்தப் பரவல் தொடர்பான பல நோய்ப் பாதிப்புகள் மிக அடிக்கடி பதிவாகியுள்ளன.
தற்போது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் மிக மோசமான தாக்கம் குறித்த அச்சுறுத்தல் ஆனது அதன் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தன.