மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கோபர் தன் (கோபர் – உயிரி வேளாண் கரிம வளங்களை செயலாற்றத் தூண்டல்; GOBAR - Galvanizing Organic Bio-Agro Resources) திட்டத்தை கர்னலிலுள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியுள்ளது.
இத்திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
கோபர்தன் திட்டமானது, கிராமத் தூய்மையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் கால்நடைகள் மற்றும் கரிமக் கழிவுப் பொருட்களிலிருந்து பொருளாதாரம் (Wealth) மற்றும் ஆற்றலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது.
இத்திட்டம், 2018-2019 காலகட்டத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 700-உயிரி-வாயு நிலையங்களை (Bio – Gas units) செயலாக்கம் செய்வதற்கு உதவி புரிகிறது.