கோபால் பாக்லே - பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம்
July 22 , 2017 2819 days 1193 0
பிரதமர் அலுவலகத்தின் (PMO) கூடுதல் செயலாளராக (Joint Secretary), கேரபால் பக்லே அடுத்த 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்கள் குழு (Appointments Commitee of the cabinet) வழங்கியுள்ளது.
இதற்கு முன் இப்பதவியில் இருந்த வினய் மோகன் வத்ரா பிரெஞ்சு நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கேரபால் பாக்லே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பக்லே 1992 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி ஆவார்.
அமைச்சரவை நியமனங்கள் குழு
அமைச்சரவையின் நியமனங்கள் குழுவானது, (Appointments Commitee of the cabinet). இந்திய அரசின் பல தலைமைப் பதவிகளுக்கு அரசு அதிகாரிகளை நியமனம் செய்கிறது.