தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் (Chonburi province) கோப்ரா கோல்டு (Cobra Gold) எனும் குறியீட்டு பெயருடைய வருடாந்திர பன்னாட்டு (Multi National) இராணுவ கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
கோப்ரா கோல்ட் ராணுவ கூட்டுப்போர் பயிற்சியின் இந்த 37 ஆவது பதிப்பை இவ்வாண்டு அமெரிக்காவின் ஆயுதப் படையும், தாய்லாந்தின் ராயல் ஆயுதப் படையும் இணைந்து நடத்தியுள்ளன.
ஏழு முழு நேர உறுப்பு நாடுகள் இவ்வருடத்திற்கான கோப்ரா கோல்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
அவையாவன
தாய்லாந்து
அமெரிக்கா
ஜப்பான்
மலேசியா
இந்தோனேசியா
தென்கொரியா
சிங்கப்பூர்.
இந்த கூட்டுப்போர் பயிற்சியில் பார்வையாளர் (observers) நாடுகளாக 10 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
அவையாவன
புருனே
லாவோஸ்
பாகிஸ்தான்
கம்போடியா
மியான்மர்
ஜெர்மனி
இலங்கை
பிரேசில்
சுவீடன்
வியட்நாம்
கோப்ரா கோல்டு கூட்டுப்போர் பயிற்சியானது ஒவ்வோர் ஆண்டும் தாய்லாந்தில் நடைபெறும் ஓர் ஆசிய-பசுபிக் இராணுவ கூட்டுப்போர் பயிற்சியாகும்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நடைபெறும் மிகப்பெரிய இராணுவ கூட்டுப் போர் பயிற்சியாக கருதப்படும் இது முதன் முதலாக 1982-இல் நடத்தப்பட்டது.
மனிதாபிமான குடிமை உதவிகள் (Humanitarian Civic Assistance - HCA), களநிலைப் பயிற்சி (Field Training Exercises - FTX), கட்டளைக்கு பின்னான செயல்பாட்டு பயிற்சி (Command Post Exercise-CPX) ஆகியவற்றின் மீது இந்த கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.