எட்டு மாநிலங்களில் கோமாரி நோய் பாதிப்பில்லாத மண்டலங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அவை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியனவாகும்.
இது இந்திய விலங்குப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தச் செய்வதையும், நாட்டின் உலகளாவியச் சந்தை இருப்பை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோமாரி நோய் என்பது காட்டு மற்றும் வளர்ப்பு விலங்குகள், குறிப்பாக கால்நடைகள், பன்றிகள் மற்றும் செம்மறி ஆடுகளைப் பாதிக்கும் அதிகத் தொற்றுத் திறன் மிக்க ஒரு வைரஸ் நோயாகும்.
இந்த வைரஸ் நோய், கால்நடைகளின் கால் மற்றும் வாயில் காயங்களை ஏற்படுத்தி, கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்படச் செய்வதோடு இந்த நோய்ப் பாதிப்புள்ள கால் நடைகள் தீவனத்தை உட்கொள்ளாது.