கோமாளி மீன் வர்த்தகத்தில் கிராமப்புற மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக மகாராஷ்டிராவின் கடற்கரையோரத்தில் ஒரு புதிய திட்டத்தை தேசிய மீன் மரபணு வளத் துறை (NBFGR - National Bureau of Fish Genetic Resources) தொடங்கியுள்ளது.
கோமாளி மீன் அல்லது கடற்சாமந்தி மீன் இனமானது பெரும்பாலும் மீன் அருங்காட்சியகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மீன் இனங்கள் கடலில் உள்ள கடற்சாமந்தியுடன் பரஸ்பர இணை வாழ்வியலை ஏற்படுத்துகின்றன.
முதன்முறையாக இவ்வகையில் ஏற்படுத்தப்படும் இந்த கோமாளி மீன் அடை காப்பகமானது மும்பையில் அமைக்கப்படவிருக்கிறது.
இது கிராம வாசிகள் கோமாளி மீன் வர்த்தகத்தை ஏற்படுத்துவதற்கு உதவி புரியும்.
தமிழ்நாடு, அந்தமான் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளிலிருந்தும் கோமாளி மீன்கள் பெறப்படுகின்றன.