இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஆலயங்களின் தங்க நகைகளை உருக்குவதற்கான ஆரம்ப வேலைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவேற்காட்டிலுள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம், சமயபுரத்திலுள்ள அருள்மிகு மாரியம்மள் ஆலயம் மற்றும் விருதுநகரின் இருக்கன்குடியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் இப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த ஆலயங்களின் தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றப்படும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்கக்கட்டிகளைச் சேமிப்பதன் மூலம் பெறப் படும் நிதிகளானது ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப் படும்.
பக்தர்களால் வழங்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பயனற்ற நிலையிலிருக்கும் தங்க நகைகளை மட்டுமே அரசானது உருக்கி கட்டிகளாக மாற்ற உள்ளது.