விரைவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப் படும் லட்டு, முறுக்கு, வடை மற்றும் பிற உணவு வகை போன்ற பிரசாதங்கள் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும்.
மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகமானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்கள் BHOG தர சான்றிதழைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கடவுளுக்குச் சுகாதாரமான உணவு படைத்தல் (BHOG - Blissful Hygiene Offering to God) என்ற சான்றிதழானது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI - Food Safety and Standards Authority of India) வழங்கப் படுகின்றது.
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் சாப்பிடக் கூடிய பொருட்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் வருகின்றன.