TNPSC Thervupettagam

கோயில் பிரசாதம் - BHOG சான்றிதழ்

November 3 , 2019 1905 days 959 0
  • விரைவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப் படும் லட்டு, முறுக்கு, வடை மற்றும் பிற உணவு வகை போன்ற பிரசாதங்கள் சிறந்த தரத்துடன் இருக்க வேண்டும்.
  • மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகமானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்கள் BHOG தர சான்றிதழைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
  • கடவுளுக்குச்  சுகாதாரமான உணவு படைத்தல் (BHOG - Blissful Hygiene Offering to God) என்ற சான்றிதழானது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI - Food Safety and Standards Authority of India) வழங்கப் படுகின்றது.
  • கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் சாப்பிடக் கூடிய பொருட்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்