அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கோலன் குன்றுகள் உள்ள பகுதி மீதான இஸ்ரேலின் இறையாண்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கோலன் குன்றுகளை “ஆக்கிரமிக்கப்பட்ட சிரியா பகுதிகள்” என்று கருதிய தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியுள்ளது.
1967 ஆம் ஆண்டு வரை கோலன் குன்றுகள் சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது.
1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாட்கள் நடைபெற்ற போரின் போது (மூன்றாவது அரேபிய இஸ்ரேல் போர்) கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
பிறகு 1981 ஆம் ஆண்டில் இஸ்ரேல் ஒருதலைபட்சமாக இந்தப் பகுதியை தன்னுடன் இணைத்தது.
இஸ்ரேலின் இந்த ஒருதலைபட்ச இணைப்பானது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.
இஸ்ரேல் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஒரு இடைநிலை மண்டலமாக இந்தப் பகுதி இருக்கிறது என்பதன் அடிப்படையில் இந்த இணைப்பை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.
கோலன் குன்றுகள் பகுதியானது தனது இயற்கை மண் வளம் மற்றும் நீர் வளம் ஆகியவற்றிற்கு முக்கியவத்துவம் வாய்ந்த பகுதியாகும்.