ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SCTIMST) ஆனது பல்வேறு காயங்களைக் குணப்படுத்தும் கோலேடெர்ம் எனப்படும் புதிய மருந்தினைத் தயாரித்துள்ளது.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் D வகுப்பு மருத்துவச் சாதனங்களை உருவாக்கிய இந்தியாவின் முதல் நிறுவனம் இது ஆகும்.
இது ஒரு பன்றியின் பித்தப்பையின் புறவணுவிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு D வகுப்பு வகை மருத்துவச் சாதனமாகும்.
இது பாலூட்டிகளின் உறுப்புகளிலிருந்து திசுப் பொறியியலுக்கான திசுக்கட்டுகளைத் தயாரிப்பதற்கான ஒரு புதுமையான தொழில்நுட்பமாகும்.
தீக்காயங்கள் மற்றும் நீரிழிவு நோயின் போது ஏற்படும் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு தோல் காயங்களைக் குறைவான வடுக்களுடன் விரைவாக குணமடையச் செய்கிறது என்பது விலங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டு உள்ளது.
இது சிகிச்சைச் செலவைக் குறைப்பதோடு, மேம்பட்ட காயமாற்றுச் சிகிச்சையினை மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.