TNPSC Thervupettagam

கோலே சதுப்பு நிலப் பறவைகள் கணக்கெடுப்பு

January 23 , 2023 677 days 362 0
  • திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 13,632 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள கோலே சதுப்பு நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பானது மேற் கொள்ளப் பட்டது.
  • இங்கு ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகின்றன.
  • பறவைகளின் அதிகளவிலான எண்ணிக்கை மற்றும் அவற்றின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற ராம்சர் தளமான திருச்சூர்-பொன்னானி கோலே தளங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் முதல் நாளில், நீர்ப்பறவைகளின் எண்ணிக்கையானது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.
  • இந்த ஆண்டு 90 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 9,904 பறவைகள் இங்கு காணப் படுவதாகக் கணக்கிடப்பட்டன.
  • 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் பதிவான எண்ணிக்கைகள் முறையே 16,634 & 15,956 ஆக இருந்தது.
  • 2018 ஆம் ஆண்டில் 33,499 ஆக இருந்த பறவைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத் தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்