TNPSC Thervupettagam

கோல்டன் உலகப் பந்தயம் (Gloden Globe Race)

July 5 , 2018 2339 days 683 0
  • மேற்கு பிரான்சில் உள்ள லெஸ் சேப்லஸ் டிஓலோனே துறைமுகத்திலிருந்து தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க கோல்டன் உலகப் பந்தயத்தில் இந்திய கடற்படையின் கடற்படை அலுவலர் தளபதி அபிலாஷ் தாமி பங்கேற்கிறார்.
  • உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கப்பலான, துரியா எனும் 1950-களில் இருந்த சுகாலி கப்பலை ஒத்த கடற்பயணம் செய்வதற்கான கப்பலுடன் இவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
  • இந்தியாவின் புகழ்பெற்ற மாலுமிகளில் ஒருவரும் கீர்த்தி சக்ராவைப் பெற்றவருமான தாமி ஆசியாவிலிருந்து செல்லும் ஒரே பங்கேற்பாளர் ஆவார்.
  • ஒரு பெண் மாலுமியுடன் 18 பங்கேற்பாளர்கள் இந்த பந்தயத்தில் உள்ளனர். இந்த பந்தயம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லெஸ் சேப்லஸ் டிஓலோனேயில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தளபதி அபிலாஸ் தாமி 2012-13ல் நடைபெற்ற இடைநில்லாத உலகை சுற்றும் கடற் பயணத்தை இந்திய கடற்படை பயணக் கப்பலான மஹ்தேய் கப்பலில் 53,000 கடல் மைல்களை தனி ஒருவனாக கடந்து முடித்த ஒரே இந்தியன் ஆவார்.

 கோல்டன் உலகப் பந்தயம்

  • இந்த கோல்டன் உலகப் பந்தயமானது UK-ன் சர் ராபின் நாக்ஸ் ஜான்ஸ்டன் என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது தனிமனிதனாக இடைநில்லாது உலகை சுற்றும் பயணத்தில் உலகில் மேற்கொண்ட முதல் பயணத்தின் 5௦ வருடங்கள் கழிந்ததை நினைவு கூர்வதற்காக நடத்தப்படுகிறது. இப்பயணம் 1968 -ம் ஆண்டில் இந்தியரால் கட்டப்பட்ட சுகாலி படகில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் போட்டியின் தனித்துவம் என்னவென்றால் 1968க்குப் பிறகு வடிவமைக்கப்பட்ட கப்பல் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த போட்டியில் இடம்பெற இயலாது.
  • இதனால் புவி இடங்காட்டி தகவல் அமைப்பு, செயற்கைக் கோள் தொடர்புகள், ஊடுருவல் உதவி மற்றும் பல உபகரணங்கள் இப்போட்டியில் தடை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்