கோல்டன் மேன் புக்கர் சர்வதேச பரிசு - 2018 (Golden Man Booker International Prize 2018)
July 11 , 2018 2331 days 840 0
ஸ்ரீலங்காவில் பிறந்து கனடாவில் இலக்கியம் பயின்ற மைக்கேல் ஒன்டாட்ஜேயின் ‘ஆங்கில நோயாளி’ (The English Patient) லண்டனில் உள்ள தெற்குவங்கி மையத்தில் ஒரே முறை வழங்கப்படும் சிறப்பு விருதான கோல்டன் மேன் புக்கர் சர்வதேசப் பரிசினை வென்றுள்ளது.
புக்கர் பரிசு ஏற்படுத்தி 50 வருடங்கள் ஆனதின் கொண்டாட்டங்களை நினைவு கூற இப்பரிசு ஏற்படுத்தப்பட்டது. ஒரே முறை வழங்கப்படும் இப்பரிசு மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேன் புக்கர் பரிசை வென்ற முன்னாள் வெற்றியாளர்கள் 51 நபர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு 5 புதினங்களின் இறுதி பட்டியலை தேர்வு செய்தது.
‘ஆங்கில நோயாளி’ என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடந்த காதல் மற்றும் மோதல்களின் கதையாகும்.
முன்பு, ‘ஆங்கில நோயாளி’ 1992 ஆம் ஆண்டிற்கான புக்கருக்கான பரிசை பேரி அன்ஸ்வொர்த்தின் 18-வது நூற்றாண்டின் அடிமைகளைப் பற்றிய கதையான ‘புனிதமான பசி‘ - யுடன் (Sacred Hunger) பகிர்ந்து கொண்டது.
2008-ல் புக்கர் பரிசு அதன் 40-வது ஆண்டு நிறைவுக்காக இதேபோல ஒரு போட்டியினை நடத்தியது. இதில் 1981-ல் இப்பரிசினை வென்ற சல்மான் ருஷ்டியின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ (Midnight’s Children) புத்தகத்திற்கு பொதுமக்கள் வாக்களித்தனர்.
கற்பனைக் கதைகளுக்கான இந்த புக்கர் பரிசு 1969ல் முதன்முதலில் வழங்கப்பட்டது. இப்பரிசு 2002-லிருந்து மேன் குரூப்பினால் வழங்கப்பட்டு வருகிறது.