TNPSC Thervupettagam

கோவாலா - அழியும் நிலையினை எட்டும் ஆபத்து

October 25 , 2024 29 days 71 0
  • ஒரு காலக்கட்டத்தில், தைல மரத்தில் நன்கு ஏறும் விலங்கினமான கோவாலாக்கள் (மரமேறிப் பைம்மான் – கோலாக் கரடி) இலட்சக்கணக்கில் காணப் பட்டன.
  • தற்போது ​​ஆஸ்திரேலியாவில் சுமார் 95000 முதல் 524000 வரையிலான கோவாலாக்களே எஞ்சியுள்ளன.
  • அரசாங்கம் ஆனது 2022 ஆம் ஆண்டில் கிழக்குக் கடற்கரை கோவாலாக்களை 'அருகி வரும்' இனம் என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது.
  • கிளமிடியா என்பது கிளமிடியா டிராக்கோமாடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் பொதுவான பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று (STI) ஆகும்.
  • இது முதன்முதலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவாலாக்களில் கண்டறியப் பட்டது.
  • அடுத்தடுத்த காலங்களில் அது முழு உள்ளூர் இனங்களையும் அழித்து விட்டது.
  • இதனால் அவற்றின் எண்ணிக்கை 95,000 முதல் 524,000 வரை குறைந்துள்ளது.
  • தற்போது, ​​ஆஸ்திரேலியா உலகின் 'இன அழிவு தலைநகராக' மாறிவிட்டது.
  • உலகிலேயே பாலூட்டிகள் அதிக எண்ணிக்கையில் அழியும் விகிதம் கொண்ட நாடாக இந்த தீவு நாடு திகழ்கிறது.
  • கடந்த 123 ஆண்டுகளில் நாட்டின் மிக தனித்துவமான பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் சுமார் 100 இனங்கள் அழிந்துவிட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்