கோவா சட்டசபையின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் இட ஒதுக்கீடு மசோதா 2024
December 22 , 2024 8 hrs 0 min 26 0
கோவாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்கள்தொகையைக் கண்டறிவதற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு அதிகாரம் அளிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையம் ஆனது மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் இடங்களை ஒதுக்கவும், குறிப்பிட்ட இடங்களைப் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர்களுக்கு ஒதுக்கவும் முடிவு மேற்கொள்ளும்.
2001 ஆம் ஆண்டில் 566 ஆக இருந்த கோவாவின் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் மக்கள் தொகை ஆனது 2011 ஆம் ஆண்டில் 149,275 ஆக உயர்ந்துள்ளது.
2003 ஆம் ஆண்டில் குன்பி, கௌடா மற்றும் வேலிப் சமூகங்கள் ST பட்டியலில் சேர்க்கப் பட்டதன் விளைவாக இந்த எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டது.
இந்த மக்கள்தொகை மாற்றத்திற்குப் பிரதிநிதித்துவத்தின் மறு மதிப்பீடு அவசியம் ஆகும்.