TNPSC Thervupettagam

கோவா மாநில தினம் - மே 30

June 2 , 2023 448 days 219 0
  • 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று கோவா மாநில அந்தஸ்தினைப் பெற்றது.
  • 1510 ஆம் ஆண்டில் பீஜப்பூரின் அடில் ஷாவைத் தோற்கடித்து அல்போன்சோ டி அல்புகெர்க் கைப்பற்றியதிலிருந்து இந்தப் பகுதி ஒரு போர்த்துகீசியப் பிரதேசமாக இருந்தது.
  • 400 ஆண்டுகளுக்குப் பிறகு, போர்த்துகீசியர்களிடமிருந்து கோவாவை இந்திய அரசு திரும்பப் பெற்றது.
  • போர்த்துகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிப்பதற்காக இந்திய ராணுவமானது, 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் "ஆபரேஷன் விஜய்" என்ற நடவடிக்கையின் கீழ் கோவா மீது படையெடுத்தது.
  • இந்திய இராணுவத்தின் இந்த இணைப்பு நடவடிக்கையானது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று தொடங்கியது.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்