கோவா விடுதலை தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 19 அன்று கீழ்க்காண்பனவற்றின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. அவையாவன
450 ஆண்டுகால போர்த்துக்கீசியரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்றதைக் கொண்டாடுதல்.
19 டிசம்பர் 1961 அன்று நடைபெற்ற விஜய் நடவடிக்கையின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல்.
1987ஆம் ஆண்டு தனி மாநில அங்கீகாரம் வழங்கப்பட்ட கோவா மாநிலமானது செழிப்பான மாநிலமாகவும், இந்தியாவில் அதிக தனிநபர் வருமானம் கொண்ட ஒரு மாநிலமாகவும் விளங்கி வருகின்றது.
இவ்வருடம் கோவா விடுதலை தினத்தின் 57 வது ஆண்டு ஆகும்.
போர்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து அஞ்சாதிவ் தீவு மற்றும் கோவாவின் டாமன் மற்றும் டையூ ஆகியவற்றின் விடுதலைக்காக இந்தியக் கடற்படையினரால் 1961 டிசம்பர் 19 ஆம் தேதி " விஜய் நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது.
பதவியில் இருந்து அகற்றப்பட்ட போர்ச்சுகல்லின் கவர்னர் ஜெனரல் மானுவல் அன்டோனியோ வஸ்ஸலோ இ ஸில்வா இந்தியாவில் அப்போதைய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிரன் நாத் தாபரிடம் சரணடைந்தார்.