புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியியல் மையமானது (NIV - National Institute of Virology) கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்புப் பொருள் கண்டறிதல் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இந்தச் சாதனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) மற்றும் NIV-யினால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டது.
இது மாதிரியில் உள்ள ஐஜிஜி நோய் எதிர்ப்புப் பொருளின் இருப்புத் தன்மையை சோதனை செய்ய இருக்கின்றது.
இந்தச் சோதனையானது ஒரு குறிப்பிட்ட ஆர்என்ஏ-வின் எண்ணிக்கையைச் சோதனை செய்ய இருக்கின்றது.
ஆர்டி-பிசிஆர் (RT-PCR) சோதனையுடன் ஒப்பிடும் போது இதற்குக் குறைந்த அளவிலான உயிரிப் பாதுகாப்பு முறைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
இது ஒரு திறன்மிக்க, விலை குறைந்த மற்றும் விரைவுச் சோதனைக் கருவி ஆகும்.
இது 90 மாதிரிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரே நேரத்தில் 2.5 மணி நேரத்தில் அவற்றைச் சோதனை செய்யும் திறன் கொண்டது.
குஜராத்தில் உள்ள சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் இந்த உபகரணங்களை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்ய இருக்கின்றது.
NIV ஆனது இந்த நிறுவனத்திற்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்தை செய்ய இருக்கின்றது.
கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான இந்தியாவின் போராட்டச் செயல்பாடுகளின் மிகப்பெரிய முன்னேற்றம் இதுவாகும். இந்தியா மிகப் பெரும்பாலான அளவில் தனது நோய்க் கண்டறிதல் உபகரணங்களை இறக்குமதி செய்கின்றது.
எலிசா என்பது நொதியுடன் தொடர்புடைய நோய் எதிர்ப்பு சோர்பென்ட் வகைச் சோதனையாகும் (ELISA - Enzyme-linked Immunosorbent Assay).
எலிசா என்பது மிகப் பரவலான நோய்த் தொற்றிற்கான, அதிலும் குறிப்பாக எச்ஐவி போன்ற தொற்று நோய்க்கான நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது.