TNPSC Thervupettagam
March 30 , 2022 847 days 527 0
  • 2022 ஆம் ஆண்டு  விங்ஸ் இந்தியா விருது விழாவில், கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு கோவிட் சாம்பியன் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • பெருந்தொற்று காலத்தில் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பாதுகாத்தல் திட்டம்” என்ற ஒரு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையமானது பொதுப் பிரிவில் “சிறந்த விமான நிலையம்” என்ற விருதினையும் “வான்வழிப் போக்குவரத்தில் புத்தாக்கம்” விருதினையும் வென்றுள்ளது.
  • மும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையமானது தனது திறன் மிக்க பசுமை நடவடிக்கைகளுக்காக வேண்டி “வான்வழிப் போக்குவரத்து நிலைத் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விருதினை” வென்றது.
  • விங்ஸ் இந்தியா என்பது வணிகம், பொதுப் பயணம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய வான்வழிப் போக்குவரத்து குறித்த ஆசியாவின் மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்