TNPSC Thervupettagam

கோவிட் சுரக்சா திட்டம்

November 18 , 2020 1471 days 661 0
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட் சுரக்சா என்ற திட்டத்தை அறிவித்தார்.
  • இந்தப் பணியின் கீழ், இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்திய அரசு ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது.
  • இதில் ஒதுக்கப்பட்ட நிதி தடுப்பூசிகளின் செலவு மற்றும் விநியோகத்தை கணக்கில் கொள்ளாது.
  • தற்போது இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன.
  • அவை கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஜைகோவ்-டி ஆகும்.
  • கோவாக்சின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் மற்றும் பாரத் பயோடெக்கால் உருவாக்கப் பட்டது.
  • கோவிஷீல்டை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • ஜைகோவ்-டி தடுப்பூசியை சைடஸ் காடிலா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • இரஷ்ய தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி என்ற தடுப்பூசியும் நாட்டில் சோதனையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்