TNPSC Thervupettagam

கோவிட் – 19ன் மூலம் அல்லது ஆதாரம் 

March 30 , 2020 1576 days 509 0
  • “பாத்தோஜென்” என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, இந்த வைரஸானது எறும்புத் திண்ணிகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது.
  • மேலும், இந்த வைரஸ்கள் மனித உயிரணுக்களை இலக்காகக் கொள்வதற்கு சடுதி மாற்றம் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே இதன் காரணமாக மனித உயிரணுக்களில் இந்த வைரஸ்கள் எளிதாகப் பரவுகின்றன.
  • எறும்புத் திண்ணிகள் சீனாவில் மிகவும் கடத்தப்படும் உயிரினங்களில் ஒன்றாகும்.
  • கோவிட் – 19 வைரஸானது ஒரு பெரிய ஆணி போன்ற தோற்றம் கொண்ட புரதத்தைக் கொண்டிருக்கும்.
  • இந்தப் புரதங்கள் வைரஸ்களின் நுழைவிற்கு வழி வகுக்கும் ஏற்பி பிணைப்பு அமைப்பை (RBD - Receptor Binding Domain) கொண்டுள்ளது. 
  • RBD ஆனது ஆஞ்ஜியோடென்சின் நொதி – 2 ஆக மாற்றம் பெறுவதுடன் பிணைந்துள்ளது. இந்த நொதி நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் இரைப்பைப் பாதையில் காணப்படுகின்றது.
  • கோவிட் – 19 ஆனது 2002-03 ஆம் ஆண்டில் தொற்று நோயாக உருவான சார்ஸ் வைரஸின் மாற்றம் பெற்ற ஒரு வடிவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்