ஆஸ்திரேலியச் சிந்தனைக் குழுவான லோவி நிறுவனம் சமீபத்தில் ஒரு கோவிட்-19 மீதான “செயல்திறன் குறியீட்டை” வெளியிட்டுள்ளது.
இக்குறியீட்டின்படி, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக சிறந்த செயல்திறன் கொண்ட நாடு நியூசிலாந்து ஆகும்.
இதில் வியட்நாம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
வியட்நாமை அடுத்து முறையே 3, 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் தைவான், தாய்லாந்து மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தக் குறியீடு 98 நாடுகளின் கோவிட் -19 சார்ந்த செயல்திறனை அணுகியுள்ளது.
இந்தக் குறியீட்டில் இந்தியா 86வது இடத்திலும் அமெரிக்கா 94வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 10வது இடத்திலும், மாலத்தீவு 25வது இடத்திலும், நேபாளம் 70வது இடத்திலும், பாகிஸ்தான் 69வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் உள்ளன.
இந்தக் குறியீட்டின் இறுதி இடத்தில் பிரேசில் உள்ளது.