இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் பொது அதிகாரி அலுவலகமானது (DCGI - Drugs Controller General of India) கோவிட் – 19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக இந்த மருந்தின் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனத்துடன் (CSIR - Council of Scientific and Industrial Research) இணைந்து கேடிலா மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
இந்த மருந்தானது கிராம் எதிர்மறை பாக்டீரியச் சீழ்பிடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தீவிரத் தன்மையுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றது.
சீழ்பிடிப்புடன் கூடிய கிராம் எதிர்மறை பாக்டீரியா என்பது நுண்ணுயிரிகளால் ஏற்படும் ஒரு முறைப்படுத்தப்பட்ட நோயாகும்.
கோவிட் – 19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் கிராம் எதிர்மறை பாக்டீரிய சீழ்பிடிப்பு நோயாளிகள் இருவரும் ஒத்தத் தன்மையுடையதாக உள்ளனர்.
சீழ்பிடிப்பு என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையாகும்.
இரத்த ஓட்டத்தில் உள்ள இரசாயனங்கள் சமநிலையற்றுப் போகும் போது, சீழ்பிடிப்பு ஏற்படுகின்றது