TNPSC Thervupettagam

கோவிட்-19 மற்றும் காசநோய் தொற்றுநோய்களின் இணைவு – ஆய்வு

August 24 , 2021 1098 days 528 0
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கூட்டமைப்பானது இந்த நாடுகளில் காசநோய் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுகளின் தாக்கம் மற்றும் ஒன்றிணைவு குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது தெரிவித்துள்ளது.
  • கொரோனா தொற்றுப் பாதிப்புகளில் பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை தற்போது 2வது முதல் 5வது வரையிலான இடங்களில் உள்ளன.
  • மேலும் இந்த நாடுகள் உலகிலேயே அதிக காசநோய் பாதிப்புடைய நாடுகளாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட 24 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • மேலும் பிரிக்ஸ் நாடுகளில் மருந்து எதிர்ப்புத் திறனுடைய காசநோய் பாதிப்புகளும் அதிக அளவில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்