TNPSC Thervupettagam

கோவில் அர்ச்சகர்களின் நியமனம்

July 30 , 2023 485 days 297 0
  • தனி நீதிபதி தலைமையில் ஜூன் 26 ஆம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
  • அர்ச்சகர்கள் (கோயில் அர்ச்சகர்கள்) நியமனத்தில் சாதிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஜூன் 26 ஆம் தேதியன்று வழங்கப் பட்ட தீர்ப்பில் கூறப்பட்டது.
  • மேலும், ஆகம சாஸ்திரத்தின் படி பூஜைகள் மற்றும் பிற சடங்குகளைச் செய்ய முறையாகப் பயிற்சிப் பெற்ற எவரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
  • இந்த வழிகாட்டுதல்கள் ஆனது, சேஷம்மாள் வழக்கில் (1972) உச்சநீதிமன்றம் வகுத்த சட்டத்திற்கு முரணானது.
  • 28 சைவ ஆகமங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோவில்களில், ஆதி சைவர்கள் / சிவாச்சாரியர்கள் /குருக்கள் ஆகிய சமூக பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆவதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் என்று காரண ஆகமமும், இதர மற்ற 27 சைவ ஆகமங்களும் தெளிவாகக் கூறுகின்றன.
  • இந்த வழக்கத்தினை சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
  • இந்த விவகாரம் தொடர்பான பிற வழக்குகள்
    • ஸ்ரீமத் பேரருளலா எத்திராஜ ராமானுஜ ஜீயர் சுவாமி மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இடையிலான வழக்கு (1972).
    • ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இடையிலான வழக்கு (2016).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்