ஐக்கியப் பேரரசில் அமைந்துள்ள அஸ்ட்ராஜெனிகா எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனமானது, தனது கோவிட் தடுப்பூசியானது, 'மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்' இரத்த உறைவு தொடர்பான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று ஒப்புக் கொண்டதையடுத்து சர்ச்சை வெடித்தது.
இந்தத் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்" இரத்தத் தட்டையணுக்கள் குறைபாடுடன் கூடிய (த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்-TTS) இரத்தக் குழாயில் இரத்த உறைவை ஏற்படுத்தக் கூடும் என்று அதன் சட்டப்பூர்வ ஆவணம் குறிப்பிடுகிறது.
இந்திய சீரம் நிறுவனத்தினால் (SII) தயாரிக்கப்பட்ட அதே தடுப்பூசியானது இந்தியாவில் கோவிஷீல்டு என்று அறியப்பட்டது.
TTS என்பது இரத்தக் கட்டிகளுடன் (த்ரோம்போசிஸ்), இரத்த தட்டையணுக்கள் (த்ரோம் போசைட்டோபீனியா) குறைவாக காணப்படும் ஓர் அரிய பாதிப்பு நிலையாகும்.