ரோஹிங்கியா பிரச்சனைகளின் காரணமாக மியான்மர் தலைவர் ஆங்சான் சூ கி யின் கௌரவக் குடியுரிமையை பறிப்பதற்கான தீர்மானத்தின் மீது கனடாவின் பாராளுமன்றமானது ஒருமனதாக வாக்களித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு ஒட்டாவாவில் அவர் இந்த கௌரவக் குடியுரிமையைப் பெற்றார்.
தலாய்லாமா, மலாலா யூசுப்சாய் மற்றும் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட மற்ற 5 பேருக்கு மட்டுமே இதுவரை கனாடவின் கௌரவக் குடியிரிமையானது வழங்கப்பட்டுள்ளது.