கேரள முதல்வர் சமீபத்தில் கேரளாவில் பால் விவசாயிகளுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை அளிப்பதற்காக கௌ சம்ரிதி பிளஸ் அல்லது பசு சம்ரிதி பிளஸ் என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கின்றார்.
அரசின் மானியத்துடன் கூடிய இத்திட்டமானது பால் விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத் தொகையில் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும்.
கட்டணத் தொகையின் மீது 50 சதவிகித அளவிற்கு மானியத்தை பொதுப் பிரிவைச் (general category) சேர்ந்த விவசாயிகள் பெறுவர்.
கட்டணத் தொகையின் மீது 70 சதவிகித அளவிற்கு மானியத்தை பட்டியலிடப்பட்ட வகுப்பு மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடிப் பிரிவினைச் சார்ந்த மக்கள் பெறுவர்.