TNPSC Thervupettagam

க்ளோனாஸ்-எம் செயற்கைக்கோள்

June 22 , 2018 2219 days 714 0
  • சோயுஸ்-2.1பி ராக்கெட்டால் தாங்கி செல்லப்பட்ட க்ளோனாஸ்-எம் (GLONASS-M) செயற்கைக் கோளை ப்ளெஸ்டெஸ்க் விண்வெளி மையத்திலிருந்து ரஷ்யா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கின்றது.
  • க்ளோனாஸ் பிணைய அமைப்பானது நில மேற்பரப்பு, கடல் மற்றும் வான்வழி பொருட்களின் உண்மையான நிலைகளைப் பற்றியத் தகவல்களை தரக்கூடியது. இது S-ன் புவியிடங்காட்டி துல்லியத் தன்மைக்கு இணையானதாக (Global Positioning System - GPS) இருக்கும்.
  • இதன் வெளியீட்டுடன் சுற்று வட்டப்பாதையில் இப்பொழுது 26 க்ளோனாஸ் செயற்கைக் கோள்கள் உள்ளன.
  • இது ரெஸெட்நெவ் (Reshetnev) தகவல் செயற்கைக்கோள் அமைப்பால் நிறுவப்பட்டது. (Formerly NPO-PM). இது 7 வருட வாழ்நாளைக் கொண்டது. இது குறிப்பிடத்தக்க அளவில் முந்தைய தலைமுறையின் க்ளோனாஸ் செயற்கைக் கோளை விட அதிகமாகும்.
  • இந்த செயற்கைக் கோளின் இதயமாக சீசியம் அணுக் கடிகாரம் செயல்படுகிறது. இது துல்லியமான வழிகாட்டுத் தகவல்களை வழங்குகிறது.
  • க்ளோனாஸ் ரஷ்யாவின் வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு ஆகும். U.S.-ன் GPS, EU-ன் கலிலியோ மற்றும் சீனாவின் பெய்டோ ஆகியவற்றிற்கு எதிரிணையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்