TNPSC Thervupettagam

சகிப்புத் தன்மைக்கான சர்வதேச நாள் - நவம்பர் 16

November 18 , 2018 2199 days 451 0
  • ஒவ்வொரு வருடமும் நவம்பர் 16 அன்று சகிப்புத் தன்மைக்கான சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்நாளானது சகிப்புத் தன்மையின்மையின் எதிர்மறை விளைவுகளைப் பற்றி மக்களுக்கு அறிவூட்டுவதையும் சமுதாயத்தில் சகிப்புத் தன்மையின் தேவைகள் பற்றி மக்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1995ல் யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட வருடாந்திர அனுசரிப்பு தினம் ஆகும்.
  • முதல் உலக சகிப்புத் தன்மை மாநாடானது துபாயில் நவம்பர் 15-16 தேதிகளில் நடைபெற்றது. இது சர்வதேச சகிப்புத் தன்மை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இம்மாநாட்டின் கருத்துரு “பன்மைத்துவத்திலிருந்து வளமையுறுதல் : கூட்டு முயற்சி மற்றும் புத்தாக்கம் வழியே பன்முகத் தன்மையை தழுவல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்