TNPSC Thervupettagam

“சக்கரங்களின் மேல் அணு” – இரஷ்ய விருது

May 23 , 2018 2280 days 669 0
  • இரஷ்யாவின் சோச்சி நகரின் நடைபெற்ற “ATOM EXPO” சர்வதேச நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு விழாவில் (ATOM EXPO-2018) உலகின் சிறந்த மக்கள் தொடர்பு பரப்புரை எனும் பிரிவின் கீழ் “சக்கரங்கள் மேல் அணு” பரப்புரைக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது.
    • “சக்கரங்கள் மேல் அணு” என்பது (Atom on Wheels) இந்திய தேசிய ஆற்றல் கழகத்தின் (Nuclear Power Corporation of India Limited - NPCIL) பெருமைமிகு பிரச்சாரம் ஆகும்.
  • இவ்விருதினை NPCIL-ன் நிர்வாக இயக்குநர் திரு. கவுதம் பிஸ்வாஸ் பெற்றுக் கொண்டார். NPCIL, இறுதிச் சுற்றிற்குத் தேர்வான ஹங்கேரி மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை வென்று இவ்விருதினைப் பெற்றுள்ளது.
  • ATOM EXPO நடைபெறும்போது நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ரஷ்யாவின் அரசாங்க அணு ஆற்றல் கழகத்தின் தலைவரால் (Rosatom) NPCIL-க்கு இந்த சர்வதேச விருது வழங்கப்பட்டது.

  • இந்தப் பிரச்சாரமானது, ஊரகப் பகுதிகளில் அணு ஆற்றலின் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அணு ஆற்றலின் பாதிப்புகள் தொடர்பான சந்தேகங்களை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்