இரஷ்யாவின் சோச்சி நகரின் நடைபெற்ற “ATOM EXPO” சர்வதேச நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு விழாவில் (ATOM EXPO-2018) உலகின் சிறந்த மக்கள் தொடர்பு பரப்புரை எனும் பிரிவின் கீழ் “சக்கரங்கள் மேல் அணு” பரப்புரைக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது.
“சக்கரங்கள் மேல் அணு” என்பது (Atom on Wheels) இந்திய தேசிய ஆற்றல் கழகத்தின் (Nuclear Power Corporation of India Limited - NPCIL) பெருமைமிகு பிரச்சாரம் ஆகும்.
இவ்விருதினை NPCIL-ன் நிர்வாக இயக்குநர் திரு. கவுதம் பிஸ்வாஸ் பெற்றுக் கொண்டார். NPCIL, இறுதிச் சுற்றிற்குத் தேர்வான ஹங்கேரி மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை வென்று இவ்விருதினைப் பெற்றுள்ளது.
ATOM EXPO நடைபெறும்போது நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ரஷ்யாவின் அரசாங்க அணு ஆற்றல் கழகத்தின் தலைவரால் (Rosatom) NPCIL-க்கு இந்த சர்வதேச விருது வழங்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரமானது, ஊரகப் பகுதிகளில் அணு ஆற்றலின் நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அணு ஆற்றலின் பாதிப்புகள் தொடர்பான சந்தேகங்களை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.