TNPSC Thervupettagam

சக்தி வாய்ந்த சூரியப் புயல்கள்

May 10 , 2024 198 days 229 0
  • சில நாட்களுக்கு முன்பு, AR3663 என்ற சூரிய கரும்புள்ளிப் பகுதியிலிருந்து இரண்டு மகத்தான சூரியச் சுடரொளிகள் வெளிப்பட்டன என்பதோடு அதன் சுடர் பரவல் பகுதியில் பூமி அமைந்துள்ளது.
  • அதன் முதல் வெடிப்பு ஆனது மே 02 ஆம் தேதியன்று ஏற்பட்டது என்ற நிலையில் இது சூரியச் சுடரொளிகளில் மிகவும் சக்திவாய்ந்த வகையான X-வகை சுடரொளி ஆகும்.
  • இது ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனாவின் பெரும்பகுதி முழுவதும் குறு அலை ரேடியோ தாக்க நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.
  • X சுடரொளி! என்ற சூரியக் கரும்புள்ளி பகுதி AR3663 ஆனது தற்போது ஒரு X1.7 சுடரொளியினை உருவாக்கியுள்ள வகையில் இது இதுவரை இந்த சுழற்சியில் நிகழ்ந்த 11வது பெரிய சுடரொளி ஆகும்.
  • இரண்டாவது வெடிப்பு ஆனது M-வகை சுடரொளி என்று அறிவிக்கப்பட்டது.
  • சுடரொளி அவற்றின் வலிமைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படுகின்றன.
  • மிகவும் சக்தி வாய்ந்த X-வகைக்கு அடுத்தபடியாக, 10 மடங்கு மிக குறைவான சக்தி வாய்ந்த M-வகை சுடரொளிகள் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து C-வகை மற்றும் இறுதியாக, B-வகை சுடரொளிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்