TNPSC Thervupettagam

சக்மா, ஹஜோங் அகதிகளுக்கு விரைவில் இந்தியக் குடியுரிமை

September 14 , 2017 2666 days 940 0
  • இந்தியாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தங்கியுள்ள சக்மா, ஹஜோங் அகதிகள் ஒரு லட்சம் பேருக்கு விரைவில் இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்த அகதிகள் வடகிழக்கு மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.
  • முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த அகதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், சக்மா, ஹஜோங் அகதிகளுக்கு விரைவில் இந்தியக் குடியுரிமை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது.
  • சக்மா, ஹஜோங் அகதிகள் அதிகம் வசித்து வரும் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சில சமூக அமைப்புகள் அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதனால் மாநிலத்தின் ஜனநாயகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டாலும் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலச் சொத்துரிமை அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று தெரிகிறது.
  • வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதியில் வசித்து வந்த சக்மா, ஹஜோங் இனத்தைச் சேர்ந்தவர்கள், 1960-ஆம் ஆண்டுகளில் அங்கு அணை கட்டப்பட்டபோது சுமார் 5000 பேர் இந்தியாவுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்து இப்போது 1 லட்சம் பேராக அதிகரித்துள்ளனர். இதில் சக்மா அகதிகள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், ஹஜோங் அகதிகள் ஹிந்து மதத்தினராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்