குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், சமீபத்தில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான 94 சங்கீத நாடக அகாடமி விருதுகளை வழங்கினார்.
இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள் உள்ளிட்ட நிகழ்த்து கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டிற்கான அகாடமி விருதுகளை இசைத் துறையில் 12 பேரும், நடனத் துறையில் 12 பேரும், நாடகத் துறையில் 9 பேரும், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகளில் 11 பேரும் பெற்றுள்ளனர்.
இந்த விருது பெற்ற சில புகழ்பெற்ற கலைஞர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக சங்கீத பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்,
கர்நாடக இசைக் கருவி (மிருதங்கம்) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெய்வேலி நாராயணன்,
பரதநாட்டியம் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊர்மிளா சத்தியநாராயணன் மற்றும்
மோகினியாட்டம் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த பல்லவி கிருஷ்ணன்.
இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் 6 சிறந்த கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி அங்கத்தினர் அந்தஸ்தையும் வழங்கினார்.
விநாயக் கேடேகர், கோவா, இந்திய இசைக்கலை
R. விஸ்வேஸ்வரன், கர்நாடகா, இந்திய இசைக்கலை
சுனயனா ஹசாரிலால், மகாராஷ்டிரா, இந்திய நடனக்கலை
ராஜா & ராதா ரெட்டி, டெல்லி, இந்திய நடனக்கலை
துலால் ராய், அசாம், இந்திய நாடகக்கலை
T.P. சின்ஹா, உத்தரப் பிரதேசம், இந்திய நாடகக்கலை
சங்கீத நாடக அகாடமி அங்கத்தினர் அந்தஸ்து அல்லது "அகாடமி ரத்னா" என்பது நிகழ்த்து கலை வடிவங்களில், கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஒரு மிக உயரிய கௌரவம் ஆகும்.
இந்த உறுப்பினர் அந்தஸ்து 40 ஆக வரையறுக்கப் பட்டுள்ளது.