- ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் சிறந்த இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு 2016ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமியின் தோழமை (Fellowship) மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
- அகாடமி ரத்னா எனப்படும் சங்கீத நாடக அகாடமி தோழமை விருது புகழ்பெற்ற நாடகக் கலைஞர் ராம் கோபால் பஜாஜ் அவர்களுக்கும், நாட்டியக் கலைஞரும் வரலாற்றாய்வாளருமான சுனில் கோத்தாரி, கர்நாடக இசைக் கலைஞரான அரவிந்த் பரிக் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
- 2016ஆம் ஆண்டிற்கான அகாடமி புரஸ்கார் எனப்படும் சங்கீத நாடக அகாடமி விருதுகளை ஐந்து பிரிவுகளின் கீழ் 43 கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
சங்கீத நாடக அகாடமியைப் பற்றி
- சங்கீத நாடக அகாடமியானது 1953ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டதாகும். இது இசை, நாட்டியம் மற்றும் நாடகத்திற்கு என்று ஏற்படுத்தப்பட்ட தேசிய அளவிலான நிறுவனமாகும்.
- இந்நிறுவனமானது நாட்டின் நிகழ்த்து கலைகளை (Performing Arts) பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாளராகத் திகழ்கிறது.
- மேலும் இந்த இலக்குகளை அடைவதற்காக பல்வேறு துறைகளில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களோடு இது இயங்கி வருகின்றது.