TNPSC Thervupettagam

சங்கீத நாடக நிறுவனத்தின் வருடாந்திர விருதுகள்

July 18 , 2019 1838 days 579 0
  • சங்கீத நாடக நிறுவனம் 2018 ஆம் ஆண்டிற்கான பின்வரும் மூன்று பிரிவுகளில் விருதுகளை அறிவித்துள்ளது.
சங்கீத நாடக நிறுவனத்தின் தோழமை விருதுகள்
  • இது உயரிய மற்றும் அரிதான ஒரு கௌரவ விருதாகும். எப்போதும் இந்த விருதைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஜாகிர் ஹுசைன் (தபேலா கலைஞர்)
    • சோனல் மான்சிங் (நடனக் கலைஞர்)
    • ஜதீன் கோஸ்வாமி (பயிற்சியாளர்)
    • கல்யாண சுந்தரம் பிள்ளை (பரத நாட்டியக் கலைஞர்)
சங்கீத நாடக நிறுவன விருதுகள் (அகாடமி புரஸ்கர்)
  • நிகழ்த்துக் கலைகள் பிரிவில் இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டார்/ பழங்குடியின இசை ஆகிய துறைகளில் 44 கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த விருது கலைகளில் நீடித்து விளங்கும் தனிநபரின் பணி மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக 1952 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.
  • இந்த விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவரால் விருது வழங்குவதற்கான சிறப்பு விழாவின் போது வழங்கப்படவிருக்கின்றன.
  • 2018 ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள் : பரத நாட்டியத்திற்காக ராதா ஸ்ரீதர், மணிப்பூரி நடனத்திற்காக அஹம் லட்சுமி தேவி, நாடக ஆசிரியருக்காக ராஜீவ் நாயக் மற்றும் நாட்டுப்புற இசைக்காக மாலினி அவாஸ்தி.
உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் யுவ புரஸ்கர்ஸ்
  • நிகழ்த்துக் கலையில், அவரவருடைய துறையில் சிறந்து விளங்கும் இளம் திறமையாளர்களைக் கௌரவிப்பதற்காக 40 வயதிற்குக் கீழுள்ள 32 இளம் கலைஞர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • சங்கீத நாடக நிறுவனத்தின் தலைவர் இந்த விருதுகளை வழங்குகின்றார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்