TNPSC Thervupettagam

சங்க்'கே-7 ஆய்வுத் திட்டம்

June 18 , 2024 159 days 223 0
  • சங்க்'கே-7 ஆய்வுத் திட்டத்திற்கான அறிவியல் பயன்பாட்டுக் கருவிகளை உருவாக்கி வழங்குவதற்கான சர்வதேசப் பங்குதார நாடுகளாக எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சீனாவுடன் இணைந்துள்ளன.
  • சீனாவின் இந்த நிலவு ஆய்வுத் திட்டமானது, 2026 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் உறைபனியைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • சீன நாட்டுப் பொறியாளர்களின் உதவியுடன் எகிப்து மற்றும் பஹ்ரைன் இணைந்து உருவாக்கும உயர் தெளிவு திறன் நிறமாலை ஆய்வு ஒளிப்படக் கருவியானது, சங்க்'கே-7 நிலவு ஆய்வுத் திட்டத்திற்காக CNSA நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு சர்வதேச விண்கல சாதனங்களில் ஒன்றாகும்.
  • இந்த ஒளிப்படக் கருவியானது சுற்றுப்பாதையில் இருந்த படியே நிலவின் துருவப் பகுதிகள் உட்பட, நிலவின் மேற்பரப்பு அமைப்புகளைப் படம் பிடித்து பகுப்பாய்வு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்