TNPSC Thervupettagam

சட்டப் பிரிவு 370 மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

December 14 , 2023 220 days 263 0
  • இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியலமைப்பு அமர்வானது, 2019 ஆம் ஆண்டில், 370வது சட்டப் பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை ஒருமனதாக உறுதி செய்தது.
  • அரசியலமைப்பின் 370வது சட்டப் பிரிவானது, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கியது.
  • 370வது சட்டப் பிரிவு சுதேச அரசிலிருந்து இந்திய மாநிலமாக மாறுவது தொடர்பான விதிகளை மட்டுமே கொண்ட சட்ட விதி என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பிறகு எந்தவொரு உள் இறையாண்மையையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றும், இந்திய அரசியலமைப்பினை அந்த மாநிலத்திற்குப் பயன்படுத்துவதற்கு மாநில அரசாங்கத்தின் ஒப்புதல் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
  • மேலும், லடாக் ஒன்றியப் பிரதேசமாக பிரிக்கப் பட்டதையும் இந்த சட்டப் பிரிவு உறுதி செய்தது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு அந்தஸ்தின் பின்னணி

  • இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப் பிரிவின் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பெற்றது.
  • இந்தச் சட்டப் பிரிவானது, இது ஒரு தற்காலிக அந்தஸ்து என்றும், குடியரசுத் தலைவர் அதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டால் அது செயல்படாமல் போய்விடும் என்றும் குறிப்பிடுகிறது.
  • எனினும், அதற்கு முன், ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரை அவசியம் ஆகும்.
  • 370வது சட்டப்பிரிவின் விளைவாக, ஜம்மு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பைக் கொண்டிருந்தது.
  • மாநில அரசு ஒப்புதல் அளிக்காத வரை, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் அனைத்துச் சட்டங்களும் அந்த மாநில அரசுக்குப் பொருந்தாது.
  • 1954 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்படுத்துதல்) ஆணையானது ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பொருந்தும் சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பட்டியலிடுகிறது.
  • மேலும், அரசியலமைப்பின் 35Aவது சட்டப் பிரிவின் கீழ் சட்ட விதிவிலக்குகள் தொகுப்பையும் குடியரசுத் தலைவர் பட்டியலிட்டார்.
  • இந்த 35A சட்டப் பிரிவானது, இந்திய அரசியலமைப்பில் இடம்பெறவில்லை. மாறாக இது ஜம்மு & காஷ்மீர் அரசியலமைப்பில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
  • 1954 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணையானது ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான ஸ்தாபக சட்ட ஆவணத்தை அமைத்தது.
  • 35A சட்டப்பிரிவு ஆனது வெளியாட்கள் அப்பகுதியில் சொத்து வாங்குவதைத் தடை செய்தல் மற்றும் காஷ்மீர் பகுதியைச் சாராதவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் சொத்து உரிமைகளை இழத்தல் போன்ற அந்த மாநிலத்தின் பல பிரத்தியேகச் சட்டங்களைப் பாதுகாத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்