தமிழக அரசானது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை 2.5 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தியுள்ளது.
அரசானது இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் திருத்தம் செய்யப்பட்டது.
கூடுதல் தகவல்
மாநில அரசால் முழுவதும் நிதியளிக்கப்படும் இத்திட்டத்திற்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகளை அடையாளம் கண்டு முன்மொழிகின்றனர்.
இந்தத் திட்டமானது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் செயல்படுத்தப் படுகின்றது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதியளித்து அதனைச் செயல்படுத்தும் நிறுவனங்களையும் அடையாளம் காண்பார்.