TNPSC Thervupettagam

சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா - விஜயதாரணி

February 28 , 2024 271 days 323 0
  • விளவங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் S.விஜயதாரணியின் ராஜினாமா ஏற்கப் பட்டதாக தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு சட்டமன்றத்தின் 21 (F) என்ற விதியின் படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யும் போது ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து தான் ராஜினாமா செய்யும் தேதியுடன் சேர்த்து அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
  • 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதன் முதலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2016 மற்றும் 2021 ஆகிய  ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
  • அவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக கட்சியில் சேர்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்