TNPSC Thervupettagam

சட்டமியற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளைத் தீர்த்தல்

November 14 , 2023 250 days 178 0
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதைக் கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம்  வெளியிட்டுள்ளது.
  • விசாரணை நீதிமன்றங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான பல்வேறு வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
  • சட்டமியற்றுபவர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளைக் கண்காணிக்கச் செய்வதற்கு ஒரு சிறப்பு அமர்வினை அமைக்குமாறு வேண்டி உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
  • குற்றவியல் வழக்குகளில் சட்டமியற்றுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் நிலை குறித்த அறிக்கைகளுக்காக உயர் நீதிமன்றங்கள் ஆனது சிறப்பு கீழ் நீதிமன்றங்களைப் பணிக்கலாம்.
  • சட்டமியற்றுபவர்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உறுதி செய்யுமாறு மாவட்ட நீதிபதிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும், உச்ச நீதிமன்றம் ஆனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் திறம்படக் கண்காணித்து தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்