சட்டவிரோத முறையிலான சொத்துத் தகர்ப்பு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
November 18 , 2024 10 days 90 0
குடிமக்களின் சொத்துக்களை (கட்டிடங்களை) தகர்ப்பதற்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆனது, வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர்களது சொத்து மற்றும் இன்ன பிற விவகாரங்களைக் கையாளுவதற்குப் போதுமான அவகாசம் அளிக்கிறது.
இந்த வழிகாட்டுதல்கள் என்பது, “சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், இரயில் பாதைகள் அல்லது நதிகள் அல்லது நீர்நிலைகள் போன்ற எந்தவொருப் பொது இடத்திலும் அமைக்கப் பட்டுள்ள அங்கீகரிக்கப்படாதப் பல கட்டமைப்புகள் மற்றும் நீதிமன்றத்தினால் தகர்ப்பிற்கான உத்தரவு வழங்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தாது”.
ஒரு உரிமையாளர் அந்த கட்டமைப்பு குறித்து பதிலளிப்பதற்காக, அந்தக் கட்டமைப்பு இடிக்கப்படுவதற்கு முன்பே மிக குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு அறிவிப்பு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த 15 நாட்கள் கெடுவானது, உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர் அறிவிப்பு அறிக்கையினைப் பெற்ற தேதியிலிருந்து தொடங்கும்.
இந்த அறிவிப்பு அறிக்கையில், கட்டமைப்பின் விவரங்கள், அது ஏன் இடிக்கப்படுகிறது, மற்றும் உரிமையாளர்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து வாதிட அனுமதிக்கச் செய்யும் "தனிப்பட்ட விசாரணை" தேதி ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை மீறுவது, இழப்பீடு நிர்ணயிப்புடன் கூடிய பல அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் என்று நீதிமன்றம் கூறியது.