சட்டீஸ்கர்: ராய்ப்பூரில் இந்தியாவின் முதல் நுண்காடுகள் (Micro Forest) உருவாக்கப்பட இருக்கிறது
August 9 , 2017 2663 days 958 0
சட்டீஸ்கர்
ராய்ப்பூரில் 70-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சற்றேறக்குறைய 19 ஏக்கர் பரப்பளவுப் பகுதியினை ஆக்ஸிஜன் நிறைந்த மண்டலமாக மாற்றுவதற்காக இந்த நுண்காடுகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
சர்வதேச அளவில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள ராய்ப்பூருக்கு இந்த நுண்காடுகள் தூய காற்றிணை வழங்க இருக்கிறது.
அடுத்த எட்டு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட இருக்கிறது.