TNPSC Thervupettagam

சணல் – ICARE (Jute – ICARE)

July 27 , 2017 2678 days 1079 0
  • இது சணல் விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்க ஜவுளித்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் ஒரு புதிய முயற்சி.
  • இந்த திட்டத்தின் பெயர் விரிவாக்கம் - Improved Cultivation and Advanced Retting Exercise for Jute (Jute – ICARE) - மேம்படுத்தப்பட்ட சணல் சாகுபடிமற்றும் மிருதுவாக்கும் முறைகள் என்பதாகும். இந்தத் திட்டம் விவசாயிகளிடையே சிறந்த வேளாண் நடைமுறைகள் மற்றும் நுண்ணுயிர்-உதவியுடன் சணலை மிருதுவாக்கும் முறைகளை அறிமுகம் செய்கிறது .
  • ரெட்டிங் என்பது சணலினை மிருதுவாக்கும் ஒரு செயல்முறை . ரெட்டிங் முறையில் சணல் நார்கள் திரவத்தில் வைக்கப்படும் , இது மரத்தின் திசுக்களில் இருந்து நார்கள் தளர்ந்து பிரிந்து வர உதவும்.
  • முதல் கட்டமாக அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காள பகுதிகளில் ரெட்டிங் முறை பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டது .
  • இந்த திட்டத்தின் கீழ் , பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கைப்பேசிகளுக்கு, சணல் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் குறித்து குறுந்தகவல்கள் அனுப்பப்படும்.
  • சோனா (SONA)
  • இது மத்திய சணல் மற்றும் நெய்யப்பட்ட இழைகள் ஆராய்ச்சி நிறுவனம் (Central Research Institute for Research in Jute and Allied Fibres, CRIJAF) உருவாக்கிய நுண்ணுயிர் கூட்டமைப்பு ஆகும்.
  • நுண்ணுயிர் கூட்டமைப்பு (Microbial Consortium) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிரி குழுக்களின் இணைவாழ்வு நிலை ஆகும்.இதன் நோக்கம் சணல் விளைச்சலை அதிகப்படுத்துவதும் , சணலின் தரத்தினை உயர்த்துவதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்